Wednesday, October 31, 2007

உங்க அப்ரைசல் மீட்டிங் எப்போங்க????

இந்த அப்ரைசல் மீட்டிங் மாதிரி ஒரு கொடுமய ஊர் உலகத்துல எங்கயுமே பாத்திருக்க முடியாதுங்க. என்னமோ நம்ம வாழ்க்கையவே நிர்ணயிக்கப்போற மாதிரி ஒரு பில்டப்பு குடுப்பாங்க பாருங்க. அப்படியே நாலு அப்பு அப்பலாமானு வரும். எழவெடுத்த வேலயா குடுப்பாங்கலாம். சரி, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ அப்படினு மனச தேத்திக்கிட்டு குடுக்கற ஆணியலாம், ‘சின்னத்தம்பி’ல வர குஷ்பு மாதிரி கை,கால்ல ரத்தம் வர வர பிடுங்கி குடுத்தா கடைசில அது ஆணியே இல்லனு சொல்றது. மீட்டிங் வக்கிறதுதான் வக்கிறீங்க. ஒழுங்கா எவன் ஆணி புடுங்கறான், எவன் புது ஆணிய நொழக்கிறான், எவன் ஆணிய புடுங்கவே முடியாத மாதிரி வளைச்சு வைக்கிறான், எவனுக்கு ஆணினா என்னனே தெரியாது அப்படி முதல்ல நோண்டிட்டு அப்புறமா ஆப்பு வக்கலாம்ல. So,உங்களுக்கு சோப்பு போட்டாதான் எல்லாமே நடக்கும்னா எங்களுக்குலாம் எதுக்கு முதுகெலும்பு . ‘ங’ போல வளைடா…இல்ல மவனே ஆப்புதான்னா மனசாட்சியோட வேல செய்ய எவனுக்குங்க மனசு வரும்?

அவளோ பெரிய Conference ரூம்ல டேமேஜர் கூட தனியா அப்ரைசல் மீட்டிங்க்கு உக்காந்திருக்கும்போது எதோ சிங்கத்த அதோட குகைலயே சந்திக்கிற ஃபீலிங். எதோ என்ன புதுசா பாக்கற மாதிரி ஒரு பார்வை பாப்பாங்க பாருங்க , அப்படியே பத்திக்கிட்டு வரும். அப்புறம் மெதுவா சிங்கம் கர்ஜனைய தொடங்கும். அப்புறம் அவங்க பேசரதெல்லாம் கேட்டா என்னமோ இதுவரைக்கும் ஒரு வேலைக்கூட பண்ணாத மாதிரி எனக்கே ஒரு மனப்பிராந்தி. அன்னிக்கு காலைல கண்டிப்பா உப்புப் போடாத சாப்பாடுதான் சாப்பிட்டு போகணும். சரி..நமக்கு எதாச்சும் கிடைக்கனும்னா நாமதான் போராடியாகனும்னு,நாமதான் பேசியாகனும்னு Last Appraisal அப்போ எங்க குல தெய்வத்த வேண்டிக்கிட்டு என்னனெனமோ ட்ரை பண்ணேன்ங்க,ம்ஹூம் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல.

ஆஃபிஸ் டைம்ல Net, ICICI Direct, Orkut, Chat-ஏ கதினு கெடந்தவங்கலாம் இப்போ எங்கயோ. அதுனால இந்த டைம் சத்தியாகிரகம்தான். பேசவே பொறதில்ல. என்ன வேணாலும் சொல்லிக்க. நான் ஒரு வார்த்தை சொல்லப்போறதில்லனு முடிவே பண்ணிட்டேன். ஆனாலும் எதாச்சும் ஒரு வகைல எதிர்ப்பு காட்டியே ஆகணுமே. அதுனால எப்படியாச்சும் மீட்டிங்க வெள்ளிக்கெழமைக்கு தள்ளிப்போட்டு கீழ இருக்கறமாதிரி எதாச்சும் மெசேஜ் இருக்கற t-shirt ஒண்ணு போட்டுட்டு போயிடலாமானு இருக்கேன்ங்க. நீங்க என்ன சொல்றீங்க?









கடைசியா என் Cubicle-ல இந்த படத்தை பெருசா மாட்டலாம்னு ஒரு ஐடியால இருக்கேன். எனக்கு வேல எதாச்சும் போச்சுன்னா உங்க கம்பெனில ஒரு சின்ன வேலயாவது வாங்கி குடுத்திடுங்க ப்ளீஸ்………


மக்களே…தயவுசெஞ்சு என் டேமேஜர்கிட்ட போட்டு குடுத்திடாதீங்க. என்ன நம்பி ஒரு அம்மா,ஒரு அப்பா,ஒரு தங்கச்சி, ஒரு நாய்க்குட்டி (சுப்பிரமணி) இருக்காங்க . எனக்கு இருக்கற Nano size மூளைக்கு வேற எந்த கம்பெனிலயும் கண்டிப்பா வேல குடுக்கவே மாட்டான்.

7 comments:

ஆயில்யன் said...

//இருக்கற Nano size மூளைக்கு வேற எந்த கம்பெனிலயும் கண்டிப்பா வேல குடுக்கவே மாட்டான்.
//
ரொம்ம்ம்ப்ப்ப் தன்னடக்கமோஓஓஓ
கடைசி போட்டோ செம ரகளையான வாசகத்தோட சூப்பர்..!

வைதேகி said...

நன்றி ஆயில்யன்

bala said...

ரைட்டு...
வெள்ளிக்கிழமை இப்படி எல்லாம் T-சர்ட் போட்டுட்டு போனா என்ன நடக்கும்னு தெரியல???
நீங்க வேண்ணா ஒரு நாள் try பண்ணித்தான் பாருங்களேன்!!! result என்னானு சொல்லுங்களேன்!!!!

Me said...

"Appraisal எல்லாம் Budget க்குள் அடக்கம்". அறியாத சிறுவனா/சிறுமியா நீ?

ஜி said...

:)))) கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் எங்களுக்கெல்லாம் எப்படி இந்த 'ஆப்பு'ரைசல் வைக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.. வச்சிட வேண்டியதுதான் :))))

Anonymous said...

நடக்கறதெல்லாம் 'அப்ரைசல்' கிடையாது. "ஆப்பு-ரைசல்" தான்...

ரசிகன் said...

ஹா..ஹா..ரொம்ப சூப்பரா இருக்குங்க..
கலக்கிட்டீங்க..
நல்ல வேளை என்னோட கம்பெனில அப்பிடியெல்லாம் இல்லை..
அந்த பனியன் வாசகங்கள்.. அம்புட்டும் அருமைங்கோ.............