Thursday, October 18, 2007

இவங்கள எங்கயாச்சும் பாத்திருக்கீங்களா??

இவங்க நடிகை கிடையாது. சமூக சேவகி,பாப் பாடகி இல்ல. அரசியல்வாதியும் ம்ஹூம். அவங்க உண்மைல ஒரு ரொம்பவுமே சாதாரமான பொண்ணுதான். ஆனா அவங்க எங்க இருக்காங்கனு தேடின மாதிரி வேற யாரையுமே தேடிருக்க மாட்டாங்க. நான் ஜூன் - 1985 ‘National Geographic’இதழோட அட்டை படத்துல வந்த பொண்ணப் பத்திதான் பேசிட்டு இருக்கேன். அவங்க ஏன் அவளோ ஸ்பெஷல்னு கேக்கறீங்களா??? இதோ கீழ இருக்கறதுதான் அந்த பொண்ணோட ஃபோட்டொ….

என்னா கண்ணு இல்ல???? ம், அதுக்காகதான் அந்த பொண்ணு பிரபலமானதே. Steve McCurry அப்படிங்கற ஒரு பத்திரிக்கைகாரர் ஆப்கானிஸ்தான்ல நடந்த போர் பத்தின செய்திகளை சேகரிச்சிட்டு இருந்தப்போ ஒரு அகதி பொண்ணோட ஃபோட்டோவ பிடிக்க ரொம்பவும் அரிதா ஒரு வாய்ப்பு கெடச்சிருக்கு. அங்க பக்கதுல ஒரு அகதி முகாம்ல இருந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஃபோட்டொ பிடிக்கலாம்னு போயிருக்காரு. அப்போ ஒரு 12 வயசுல ஒரு குட்டி பொண்ண பாத்ததுமே அந்த பொண்ண ஒரு போஸ் குடுக்க சொல்லி இந்த படத்த எடுத்திருக்காரு. அவர் அத எடுத்தப்போ அந்த படம் எந்த மாதிரியான ஒரு பரபரப்ப ஏற்படுத்த போகுதுனு அவருக்கே தெரிஞ்சிருக்காது. அந்த பொண்ணோட பேரயும் அவர் கேட்டுக்கல. அந்த படம் வெளி வந்தப்போ அதோட பேரு ‘The Afgan Girl’னு வச்சுட்டாங்க. இந்த பொண்ணோட கண்களைப் பார்த்த அப்புறம் தான் உலகத்துக்கே அந்த போரோட கொடூரம் தெரிய ஆரம்பிச்சது. அந்த கண்கள்ல இருந்தது பயமா?தனிமையான உணர்வா?, இல்ல எல்லாரும் இங்க செத்து பொழச்சிட்டு இருக்கோம்..நீங்க உங்க வீட்ல ஜாலியா உக்காந்திட்டு இந்த புக்க படிச்சிட்டு இருக்கீங்க அப்படிங்கற ஒரு வெறுப்புணர்வா? எல்லாம் சேந்து இந்த படம் ‘உலகையே மாற்றிய படங்’கள்ல ஒண்ணா வந்திடுச்சு.
அதுக்கப்புறம் இந்த பொண்ண தேடிக்கண்டுபிடிக்க நிறையவே முயற்சிகள் நடந்ததாம். பேருகூட தெரியல அப்படிங்கறதால யாருக்குமே எந்த விபரமும் தெரியல.
அப்புறம் ஜனவரி 2002 ல ‘National Geographic’ magazine-ல இருந்து ஒரு படையே கெளம்பிருக்கு. எப்படியாச்சும் இந்த பொண்ண கண்டுபிச்சே ஆகனும்னு கங்கணம் கட்டாத குறையா. அந்த பொண்ணோட அகதியா வந்தவங்க ,அவ தங்கி இருந்த அகதிகள் முகாம்ல இருந்தவங்க அப்படி இப்படினு நெறய பேர இந்த படத்தக்காட்டி கேட்டிருக்காங்க. இதுல நெறய பொண்ணுங்க நாந்தான் இவ-னு சொல்லிட்டு வந்திருக்காங்க. கொஞ்சம் பசங்க ஒரு படி மேல போயி இந்த பொண்ணு என்னோட பொண்டாட்டி அப்படினு சொல்லிருக்காங்க. Steve எவளோ கடுப்பாகிருப்பாரு. பேசாம தமிழ்ப்பட ஹீரோஸ் கிட்ட ஃபோட்டோவ குடுத்திருந்தா போதும். அடுத்த நாளே பொண்ண எங்க இருந்தாலும் தூக்கிட்டு வந்திருப்பாங்க.
அப்புறம் ஒரு வழியா ரொம்பவுமே கஷ்டப்பட்டு அந்த குட்டிப்பொண்ணு மாதிரியே இருக்கற ஒரு பொண்ணக் கண்டுபிடிச்சாச்சு. அவளுக்கு இப்போ வயசு 30க்கும் மேல. அவள முன்ன மாதிரியே போஸ் குடுக்க சொல்லியும் அந்த பழய கண்ணோட பவர் வரலயாம். இதுதாங்க இப்போ அந்த கண்ணழகி.
ஆக்சுவலா அந்த பொண்ணுக்கே அவள அடையாளம் தெரியல. நம்மள மாதிரி ஒரு பாஸ்போர்ட் ஃபோட்டொ எடுத்தா கூட ஊரெல்லாம் ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ சொல்லிட்டு இருக்கறவங்க இருக்கறப்போ அவளுக்கு தன்னோட படத்த உலகம் முழுசுமே பாத்திருக்காங்க அப்படிங்கறது கூட தெரியல. ஆனா அவளுக்கு அந்த ஃபோட்டொ எடுத்த நியாபகம் மட்டும் இருந்திருக்கு. அது அந்த பொண்ணுதானானு அந்த படத்துல இருந்த அவங்க கண்ணோட விழித்திரையில இருந்த கோடுகள வச்சு செக் பண்ணிக்கிட்டாங்களாம்.
அப்புறம் இந்த பொண்ணப் பாத்தி ரொம்பவுமே டீடெய்லா எல்லாம் எழுதியாச்சு. இந்த படம் எடுத்ததோட நியாபகமா இந்த போரால பாதிக்கப்பட்டவங்ககளுக்காக ‘Afgan Girls Fund’ –னு லாம் ஆரம்பிச்சாங்க. அவங்கள கண்டுபிடிச்ச கதைய National Geographic ‘Search for Afgan girl’-னு ஒரு Documentry-யா வெளியிட்டாங்க. இப்போ இந்த பொண்ணு ரெண்டு குட்டி பசங்களுக்கு அம்மா.
இந்த பொண்ணோட பேரு நான் சொல்லவே இல்லயே…..Sharbat Gulam


சரி….அதெல்லாம் இருக்கட்டும்..இந்த குட்டிப்பையனோட கண்கள் எப்படி இருக்கு???

6 comments:

வடுவூர் குமார் said...

ஏனோ, ஐன்ஸ்டின் ஞாபகம் வருகிறது அந்த கடைசி படத்தை பார்க்கும் போது.

வைதேகி said...

ஐன்ஸ்டின்கும் அந்த படத்துக்குமா??? :S

கார்த்திக் பிரபு said...

andha kangalai parthal ennamai oodruvukiradhu ..appappa

G.Ragavan said...

ஷர்பத் குலாமா? ரோஜா ஜூசுன்னு பேரா....ம்ம்ம்ம் இப்ப ரெண்டு கொழந்தைங்க குடும்பம்னு அமைதியாயிருப்பாங்க. அதான் கண்ணுல அந்தப் பவர் இல்ல.

Anonymous said...

its true kumar.... there is some "look alike" with einstein

saran

வைதேகி said...

ரெண்டு பேரு சொல்லிட்டீங்கல்ல....அப்போ அந்த படம் ஐன்ஸ்டீன் மாதிரிதான் இருக்கு. ஒத்துக்கறேன்.