(என்னா கண்ணுங்க….chance e illa)
அதன் பின் மர்லின்க்கு ஆங்கிலத்தில் சொல்வது பொல 'No Looking Back’'. மாடலிங்கை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தன. ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனர். இவரது கடைகண் பார்வைக்காக தவமிருந்தனர் பலர்.
இவரது 'The Seven Year Itch' என்ற திரைப்படத்தில்தான் இவரது புகழ் உச்சிக்கு சென்றது. 'The Most Iconic Image of the 20th century' என்று அழைக்கபட்ட இவரது இந்த புகைப்படம் இவரை உலகபுகழ் அடைய செய்தது. (இந்த pose-அ கூட நம்ம ரம்பா காப்பி அடிச்சதே ‘அழகிய லைலா’ பாட்டுல…)
இவரது 4 திருமணங்களும் வெற்றிகரமானதாக இல்லை. தனது வாழ்நாளின் கடைசி கட்டங்களில் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார் ஜான்.F.கென்னடியுடன் இவர் கொண்டிருந்த ரகசிய காதல் உலகமறிந்த (!!!) ஒன்று. கென்னடியின் மனைவியான ஜாக்குலின்க்கும் இவர்க்குமான குழாயடிசண்டைதான் அன்றைய பத்திரிக்கைகளுக்கு அவல். இவரது இறப்பிற்கு முன்பு இவரது கடைசி பொது நிகழ்ச்சி கென்னடியின் பிறந்தநாள் விழா. அப்பொது அவர் பாடிய ‘Haappy Birthday Mr.President’ பாடலை கேட்டு ‘Jackie had fits’ என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் எழுதின.
தனது 36 வது வயதில் மிகவும் மர்மமான முறையில் இவர் இறந்தார். இவரது வீட்டின் பணிப்பெண்ணால் இவரது உடல் படுக்கை அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அளவுக்கு அதிகாமான தூக்கமாத்திரையால் இவர் இறந்தாக காரணங்கள் சொல்லப்பட்டாலும்,இவரது மரணம் இன்னும் மர்மம் நிறைந்தாகவே கருதப்படுகிறது.

2 comments:
பதிவுலகிற்கு நல்வரவு
நன்றி
Post a Comment