Friday, October 5, 2007

தங்க விகிதம்

நம்ம அழகான மூஞ்சிங்க, நம்ம விரல்கள், நம்ம கை, நத்தை, சூரியகாந்திப்பூ, மோனலிசா ஓவியம் இது எல்லாத்துக்கும் ஒரு பொதுவான விசயம் ஒண்ணு இருக்குங்க. அது என்னனு கேக்கறீங்களா?????

அந்த மேட்டர்தான் தங்க விகிதம்(Golden Ratio).

நீங்க இந்த ‘Da Vinci Code’ புத்தகம் படிச்சிருந்தா இத பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். இந்த தங்க விகிதம் அப்படிங்கறது ஒரு விகித எண். இதோட மதிப்பு 1.618. இத ஃபிரான்ஸ்ல இருந்த ஒரு மூளக்காரருதான் கண்டுபிடிச்சிருக்காரு. அவரு கண்டுபிடிச்சப்போ இந்த எண்ணோட மதிப்பு யாருக்கும் தெரியல. ஆனா அவருக்கு பின்னாடி வந்த நெறய புத்தியுள்ள மனுசங்க இந்த எண்ண கொஞ்சம் ஆஃபரேஷன் பண்ணி நெறய உண்மைகள நம்மள மாதிரி மரமண்டைகளுக்கு புரியர மாதிரி சொல்லிட்டு போயிருக்காங்க.

சரி…நாம இப்போ நம்ம மூஞ்சிய பத்தி பாக்கலாம். கீழ இருக்கற பொண்ணோட படத்த பாருங்க.

இதுல நீலம்,மஞ்சள்,பச்சை,ஊதா-னு 4 கலர்ல கோடு கோடா போட்டிருக்கா???
நீல கோடை மஞ்சள் கோடால் வகுத்தால் தங்க விகித எண் (1.618)
அதே மாதிரி…. மஞ்சளுக்கு பச்சை, பச்சைக்கு ஊதா 1.618 .

உங்க கண்களோட பாவைகள்(Pupils) ரெண்டுக்கும் இருக்கற தூரத்த(அல்லது நீங்க புன்சிரிப்பு சிரிக்கிறப்போ உங்க உதட்டோட நுனிகளுக்கு இடையே உள்ள தூரத்த) உங்க புருவங்களோட ஆரம்பங்களுக்கு இடையே இருக்கற தூரத்தால வகுத்தா கிடைக்கிற மதிப்பு தான் தங்க விகிதம். இதோடது 1.618-அ இருக்கணும். அப்படி இருந்தாதான் நீங்க சைட் அடிக்கவோ or சைட் அடிச்ச ஆள பாத்து சிரிக்கவோ லாயக்குனு நம்ம டாவின்சி சொல்ராரு. அதாங்க நம்ம மோனலிசா படத்தை கூட வரஞ்சாரே…அவருதான்.

அப்புறம்,
1)உங்க மேலுதட்டோட நுனியில இருந்து தாடையோட கீழ் நுனி வரைக்கும் இருக்கற தூரத்தையும், உங்க உதட்டோட நுனிகளுக்கு இடையே உள்ள தூரத்தயும் வகுத்தாலும்,
2)உங்க மூக்கோட நீளத்தை, ஒரு கண்ணோட(உங்களுக்கு ரெண்டு கண்ணும் ஒரே அளவுதான??)அகலத்தால் வகுத்தாலும்,
3)உங்க நெற்றிபொட்டுல இருந்து காதோட கீழ் நுனி வரைக்கும் இருக்கற தூரத்தை, உங்க மூக்கோட நீளத்தால் வகுத்தாலும்,
4)உங்க புருவங்களுக்கு இடையே இருக்கற தூரத்தை, உங்க மூக்கின் கீழ இருந்து மேலுதட்டின் நுனி வரைக்கும் இருக்கற தூரத்தால் வகுத்தாலும்,
தங்க விகிதம் தான் கெடக்கணுமாம்.

என்ன தொட்டு பாத்துகிறீங்களா, எல்லாம் கரெக்டா இருக்கானு????? :D


இப்போ இங்க இருக்கற படத்த பாத்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் மேட்டர் இருக்கு.உங்க முன்பற்கள் ரெண்டு இருக்குமே, அந்த ரெண்டையும் சேத்து இருக்கற நீளத்தை, ஒரு பல்லோட அகலத்தால் வகுத்தாலும் தங்க விகிதம் தான் கெடக்கணும்.

என்ன???எல்லாம் கரெக்டா இருக்கா உங்களுக்கு?????? அப்போ நீங்க மன்மதன் and ரதி & co-வோட வாரிசாதாங்க இருக்கணும். காலர தூக்கி விட்டுகோங்க. நீங்க பையனா இருந்தா கீழ இருக்கற பொண்ண தைரியமா கரெக்ட் பண்ணிக்கலாம். ஏன்னா இந்த பொண்ணுக்கு மேல சொன்ன எல்லாமே பொருந்துதாம். இவங்க ஒரு a true “mathematical beauty” with facialmeasurements fitting a Golden Ratio.


No comments: