Monday, October 15, 2007

ஆபிஸ் டைம்ல இத படிச்சிட்டு இருக்கீங்களா???

எல்லா சாப்ட்வேர் ஆபிஸ்லயும் எல்லாரும் ரொம்பவே பிசியா இருக்கற மாதிரி இருக்கும். ஆமாங்க, அவங்க பிசியாதான் இருக்காங்க…..ஃபிரண்ட்ஸ் கூட சாட் பண்ணிகிட்டு, ஆன்லைன்ல கேம்ஸ் ஆடிட்டு, பங்கு சந்தைல முதலீடு பண்ணிட்டு, ப்ளாக்ஸ்(!!!!!) போட்டுட்டு இல்லனா படிச்சிட்டு, மெயில் பண்ணிட்டு, இல்லனா சும்மாவாச்சும் Google, Wiki-ய லாம் நோண்டி தன்னோட அறிவ பெருக்கிட்டு இருக்காங்க. அப்புறம் இருக்கவே இருக்கு Orkut, Face Book, My Space. மொத்தத்துல ஆணி பிடுங்கறத தவிர வேற எல்லா வேலயும் பாக்கறாங்க. இந்த மாதிரி ஆபிஸ் டைம்-ல வெட்டி வேல பாத்திட்டு இருக்கறதுக்கு ஒரு பேர் இருக்குங்க. அது தான் ‘Cyber Slacking’.

நம்மாளுங்க நெறய பேரு ஆர்க்குட்ட ஒரு வாரம் ஆனாலும் Sign-out பண்றது இல்ல. ‘ஆபிஸ்ல தான் இருக்கியா’, ’உங்க வீட்டு நாய் குட்டி போட்டுடுச்சா’, ’பக்கத்து cubicle பொண்ணுகிட்ட எதோ பேசணும்னு சொன்னியே’ இப்படினு முடிவிலியா பேசிகிட்டே இருக்காங்க. சிலபேரு ‘Can I be your friend????’-னு பொண்ணுங்களுக்கு scrap பண்றதயே ஒரு வேலயா வச்சிட்டு இருக்காங்க. அதுக்கு அவளும் ‘Have we met??’-னு ஒரு ரிப்ளை. அவந்தான் ஒரு தடவ ஆர்க்குட்ல நொழஞ்சா கொறஞ்சது ஒரு 50 பொண்ணுங்களுக்காவது இந்த scrap-அ அனுப்பிட்டுதான் வேற வேல பாக்கறானு தெரியுதுல்ல. இந்த ரிப்ளை ரொம்ப அவசியமா??? Orkut-அ உருவாக்குன ஆர்க்குட் பயுக்கோக்டன்(வாய் சுழுக்கிக்கிச்சி) ஏதோ புதுசா பண்ணனும்னு எவளொ கஷ்டப்பட்டு இத பண்ணிருப்பாரு…ஆனா நம்ம ஆளுங்க உடனே அவரு சின்ன வயசுல சைட் அடிச்ச ஃபிகர்-அ திரும்ப கண்டுபிடிக்கிறதுக்காகதான் இதயே உருவாக்கிருக்காருனு அதுக்கு கண்ணு,காது,வாய்,மூக்கு எல்லாம் வச்சு ஒரு ஃபார்வார்ட் மெயில் அனுப்பறாங்க. அத நாமளும் வாய தொரந்து படிச்சிட்டு ‘ஆஹா,என்னே காதலின் மகிமை’-னு ஃபீலிங்ஸ் விட்டுட்டு இருப்போம்.
அப்புறம் இந்த மெயில் பண்றது. நமக்கு inbox-அ 5 நிமிசத்துக்கு ஒருதடவ refresh பண்ணனுங்கறது ஒரு அனிச்சையான விசயம் ஆகிடுச்சு. ஆபிஸ்க்கு வந்ததும் ஒரு சொத்தையான ‘Good Moring’ mail. வெள்ளிக்கெழம ஆச்சுனா ஏற்கனவே 1008 தடவ ஃபார்வேர்ட் ஆன ‘Happy Weekend’ மெயில். ரெண்டு நாளும் பெருசா என்னமோ பண்ணபோற மாதிரி. தின்னுட்டு தின்னுட்டு தூங்க பொறதில ஒண்ணும் கொறச்சல் இல்ல. அப்புறம் ‘டேய், உங்களுக்கு ஒண்ணு தெரியுமானு’ ஒருத்தன் Chain Mail ஆரம்பிச்சா போதும். அத வச்சே 5 நாலும் ஓட்டிடுவாங்க நம்ம பசங்க. இந்த லட்சணத்துல ‘இந்த மெயில நீ 100 பேருக்கு ஃபார்வேர்ட் பண்ணல மவனே நீ ரத்தம் கக்கி சாவ’னு ஒரு மெயில் வரும். நம்மாளுங்களுக்கு கேக்கவா வேணும். சாமிக்குத்தம்னு கண்ணத்துல போட்டுகிட்டே 100 என்ன 200 பேருக்கு அத ஃபார்வேர்ட் பண்ணுவான். என்ன கொடும சாமி இது???? அப்புறம் இந்த ‘Bill Gates sharing his fortune’ மாதிரியான மெயில். அவன் என்ன கேணகிறுக்கனா நம்மள மாதிரி, சும்மா பணத்த அள்ளி கொடுக்க. யாஹூ Messenger-அ நெறய ஆபிஸ்ல தடை பண்ணி என்னங்க பிரயோஜனம். அதான் இருக்கவே இருக்கு G-talk. இத பத்தி சொல்லவே வேண்டாம். என்ன, ஒரே டைம்ல 5 G-talk windows blink ஆகிட்டு இருக்கா உங்களுக்கு இப்போ…ம்ம்ம். அப்போ கண்டிப்பா நீங்க ஒரு ‘Cyber Slacker தான்.


ஆபிஸ் டைம்ல கொறஞ்சது 20%-அ நம்மாளுங்க இந்த மாதிரி அவங்க சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திகிறாங்கலாம். இந்த அளவு நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வேற போகுதாம். ‘Trade Me’ அப்படிங்கற Stock Market site-அ 700,000 ப்ரெளசர்ஸ் விசிட் பண்ணிருக்காங்க. கம்பெனி டைம்ல இது சராசரியா 27 நிமிசம். இத எல்லா Employees-க்கும் கண்க்கு போட்டா 323,000 மணி நேரம் வருது. So, எல்லாம் சேத்து 37 வருஷம் கம்பெனியோட Productivity போயே போச்சு.
நம்ம ஆளுங்க கிட்ட இந்த மாதிரி ஏன் ‘Cyber Slackers-அ இருக்கீங்கனு கேட்டா’ என்ன தெரியுமா சொல்லிருக்காங்க. They are Bored, Over-worked, Under-Paid and Unchallenged at work-னு. நெறய கம்பெனிங்க இந்த மாதிரி ‘Cyber Slacking’-அ தடுப்பதற்காக நெறய ட்ரை பண்றாங்களாம். ரகசியமா கேமரா வக்கிறது, Site-Filters பயன்படுத்தறது,மெயில் அனுப்பறத Track பண்றது. எவளோ Bandwidth பயன்படுத்திருக்காங்கனு ,என்னென்ன Files-லாம் Internet-ல இருந்து இறக்குமதி பண்ணிருக்காங்க பாக்கறது இப்படி நெறய. ஆனா நம்ம பசங்க என்ன லேசுப்பட்டவங்லா என்ன?? நமக்கு தான் இதுலாம் ஜுஜுபி ஆச்சே. எதுலாம் பண்ண வேண்டாம்னு சொல்றாங்களோ அத தேடி தேடி போய் பண்றவங்களாச்சே நாம.

இதோ இங்க இருக்கற மாதிரிதான் நாம ஆணி பிடுங்கற டைம இண்டர்னெட்ல waste பண்றோமாம்பா…சொல்லிகிறாங்க.

அப்புறம் மக்களே, இந்த ஆபிஸ் டைம்ல போன் பேசறதுலாம் இந்த ‘Cyber Slacking’ கணக்குல சேராது.அதுனால் எந்த பொண்ணாவது ஆபிஸ் டைம்ல போன் பேசிட்டு இருந்தா, ‘Hey uuu…cyber slackerrrr...’-னு சண்டைக்கு போகாதீங்க. ஆபிஸ் டைம்ல ஃபோன் பேசறதுலாம் பெண்களோடப் பிறப்புரிமை. சரியா??

20 comments:

இராம்/Raam said...

/அப்புறம் மக்களே, இந்த ஆபிஸ் டைம்ல போன் பேசறதுலாம் இந்த ‘Cyber Slacking’ கணக்குல சேராது.அதுனால் எந்த பொண்ணாவது ஆபிஸ் டைம்ல போன் பேசிட்டு இருந்தா, ‘Hey uuu…cyber slackerrrr...’-னு சண்டைக்கு போகாதீங்க. ஆபிஸ் டைம்ல ஃபோன் பேசறதுலாம் பெண்களோடப் பிறப்புரிமை. சரியா??//

தோடா.... இதெல்லாம் கொஞ்சம் டூமச்... :)

வைதேகி said...

:P எல்லாம் இருக்கறது தானுங்க...கண்டுக்காம சைட்ல வுட்டுக்கோங்க.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எல்லாம் சரி,இந்தப் பதிவை அடிக்கும் போது,உங்க மானேஜர் என்ன வேலை குடுத்துருந்தாரு?

வைதேகி said...

என் டேமேஜர் ஒரு Test Case எழுத சொல்லி ஆணி குடுத்திருந்தார். அந்த டைம்ல தான் இத அடிச்சதே...நானும் Cyber Slacker தான். ஒத்துக்கறேன்.

ஆயில்யன் said...

இந்த விஷயங்கள ரொம்ப படிச்சு எழுதணும்னா கொஞ்சம் புகைச்சல் கொஞ்சம் எரிச்சல் & கொஞ்சம் குமுறல் எல்லாம் இருந்தாத்தான் முடியும்!
ரொம்ப நாளா "வைதேகி காத்திருந்தார்" போல
(ஸேம் ஃபீலிங்க்ஸ்- நாம மெயில் செக் பண்ண லாக் ஆகும் போதுதான் என்ன பண்றீங்கன்னு? கேப்பாங்க இத்தனைக்கும் இன்னொருத்தன் உலக் நாடுகள்ல இருக்கறதுங்களோடெல்லாம் கருத்து பரிமாறிக்கிட்டு இருப்பாங்க!?)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//"ஆபிஸ் டைம்ல இத படிச்சிட்டு இருக்கீங்களா???"//


ஆமா நீங்க..இந்தப் பதிவை ஆபிஸ் டைம்லதான் எழுதுனீங்களா..?

வைதேகி said...

//ரொம்ப நாளா "வைதேகி காத்திருந்தார்" போல//
hee hee...கொஞ்ச காலம் தான்.ஒரு வருசம்.

//இந்தப் பதிவை ஆபிஸ் டைம்லதான் எழுதுனீங்களா..?//
பின்ன....கண்டிப்பா.

மங்களூர் சிவா said...

//
யாஹூ Messenger-அ நெறய ஆபிஸ்ல தடை பண்ணி என்னங்க பிரயோஜனம். அதான் இருக்கவே இருக்கு G-talk.
//
ஒரு உருப்படியான கமெண்ட்.

'Socks' தடை செய்து யாஹு மெசென்சரை தடுக்கிறார்கள்.

இப்போது யாஹூ மெசென்ஞர் இனைய பக்கத்திலேயே வேலை செய்கிறது. யாஹுவே இந்த வசதியை தருகிறது.

யாஹு இந்த வசதியை தரும்முன்
www.meebo.com
மூலமாக இணைய பக்கத்திலேயே யாஹு சாட் செய்ய முடிந்தது.

மங்களூர் சிவா said...

//
வைதேகி said...
என் டேமேஜர் ஒரு Test Case எழுத சொல்லி ஆணி குடுத்திருந்தார். அந்த டைம்ல தான் இத அடிச்சதே...நானும் Cyber Slacker தான். ஒத்துக்கறேன்.
//

ஓ நீங்களும் எங்களை மாதிரியே ரொம்ப நல்லவங்களா??/
அவ்வ்வ்வ்

கதிர் said...

:))

இம்சை அரசி said...

ஹி... ஹி... நாங்கெல்லாம் 2 நிமிஷத்துக்கு ஒருமுறை automaticஆ refresh ஆகற மாதிரி outlookல set பண்ணிட்டோமில்ல ;)))

இம்சை அரசி said...

இருங்க இருங்க... நாளைக்கு ஆள் வச்சு, officeல நீங்க ஃபோன் பேசிட்டு இருக்கறப்ப கத்த சொல்றேன் ;)

cheena (சீனா) said...

நம்புங்க - நான் அலுவலக நேரத்துலே மயில், சாட், கூகுள், விக்கி, ஆர்குட், பிளாக் இதெல்லாம் பாக்குரதே இல்லீங்கோ - நெசமாங்கோ.

வைதேகி said...

//ஓ நீங்களும் எங்களை மாதிரியே ரொம்ப நல்லவங்களா??//

பின்ன.... :) :)

வைதேகி said...

//தம்பி said...
:))//

:))))

ஜி said...

//ஆபிஸ் டைம்ல போன் பேசறதுலாம் இந்த ‘Cyber Slacking’ கணக்குல சேராது.அதுனால் எந்த பொண்ணாவது ஆபிஸ் டைம்ல போன் பேசிட்டு இருந்தா, ‘Hey uuu…cyber slackerrrr...’-னு சண்டைக்கு போகாதீங்க. ஆபிஸ் டைம்ல ஃபோன் பேசறதுலாம் பெண்களோடப் பிறப்புரிமை. சரியா??//

நல்ல வேளை ஒத்துக்கிட்டீங்க... ;))) அப்புறம் வாங்க பதிவுலகத்துக்கு... ரொம்ப நாளா கவனிச்சிட்டு இப்பத்தான் வர்றீங்க போல... :)))

வைதேகி said...

//இம்சை அரசி said...
ஹி... ஹி... நாங்கெல்லாம் 2 நிமிஷத்துக்கு ஒருமுறை automaticஆ refresh ஆகற மாதிரி outlookல set பண்ணிட்டோமில்ல ;)))
//
நீங்கலாம் யாரு???? :P

வைதேகி said...

//இம்சை அரசி said...
இருங்க இருங்க... நாளைக்கு ஆள் வச்சு, officeல நீங்க ஃபோன் பேசிட்டு இருக்கறப்ப கத்த சொல்றேன் ;)///
அட...நான்லாம் ரொம்ம்பப நல்ல பொண்ணுங்க.ஆபிஸ்ல pm landline-க்கு call பண்ணாக்கூட எடுக்கமாட்டேன்னா பாத்துகோங்களேன்.

வைதேகி said...

//cheena (சீனா) said...
நம்புங்க - நான் அலுவலக நேரத்துலே மயில், சாட், கூகுள், விக்கி, ஆர்குட், பிளாக் இதெல்லாம் பாக்குரதே இல்லீங்கோ - நெசமாங்கோ.//

நம்பிட்டோமுங்க. :D

வைதேகி said...

//நல்ல வேளை ஒத்துக்கிட்டீங்க... ;))) அப்புறம் வாங்க பதிவுலகத்துக்கு... ரொம்ப நாளா கவனிச்சிட்டு இப்பத்தான் வர்றீங்க போல... :)))//

நன்றி ஜி. என்ன பண்றது..நமக்குலாம் ஆணி குடுக்கவே பயப்படுறாங்க.அதான் இருக்கற டைம்ல இதயாச்சும் உருப்படியா பண்ணலாமேனு தான்.