Wednesday, October 31, 2007

உங்க அப்ரைசல் மீட்டிங் எப்போங்க????

இந்த அப்ரைசல் மீட்டிங் மாதிரி ஒரு கொடுமய ஊர் உலகத்துல எங்கயுமே பாத்திருக்க முடியாதுங்க. என்னமோ நம்ம வாழ்க்கையவே நிர்ணயிக்கப்போற மாதிரி ஒரு பில்டப்பு குடுப்பாங்க பாருங்க. அப்படியே நாலு அப்பு அப்பலாமானு வரும். எழவெடுத்த வேலயா குடுப்பாங்கலாம். சரி, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ அப்படினு மனச தேத்திக்கிட்டு குடுக்கற ஆணியலாம், ‘சின்னத்தம்பி’ல வர குஷ்பு மாதிரி கை,கால்ல ரத்தம் வர வர பிடுங்கி குடுத்தா கடைசில அது ஆணியே இல்லனு சொல்றது. மீட்டிங் வக்கிறதுதான் வக்கிறீங்க. ஒழுங்கா எவன் ஆணி புடுங்கறான், எவன் புது ஆணிய நொழக்கிறான், எவன் ஆணிய புடுங்கவே முடியாத மாதிரி வளைச்சு வைக்கிறான், எவனுக்கு ஆணினா என்னனே தெரியாது அப்படி முதல்ல நோண்டிட்டு அப்புறமா ஆப்பு வக்கலாம்ல. So,உங்களுக்கு சோப்பு போட்டாதான் எல்லாமே நடக்கும்னா எங்களுக்குலாம் எதுக்கு முதுகெலும்பு . ‘ங’ போல வளைடா…இல்ல மவனே ஆப்புதான்னா மனசாட்சியோட வேல செய்ய எவனுக்குங்க மனசு வரும்?

அவளோ பெரிய Conference ரூம்ல டேமேஜர் கூட தனியா அப்ரைசல் மீட்டிங்க்கு உக்காந்திருக்கும்போது எதோ சிங்கத்த அதோட குகைலயே சந்திக்கிற ஃபீலிங். எதோ என்ன புதுசா பாக்கற மாதிரி ஒரு பார்வை பாப்பாங்க பாருங்க , அப்படியே பத்திக்கிட்டு வரும். அப்புறம் மெதுவா சிங்கம் கர்ஜனைய தொடங்கும். அப்புறம் அவங்க பேசரதெல்லாம் கேட்டா என்னமோ இதுவரைக்கும் ஒரு வேலைக்கூட பண்ணாத மாதிரி எனக்கே ஒரு மனப்பிராந்தி. அன்னிக்கு காலைல கண்டிப்பா உப்புப் போடாத சாப்பாடுதான் சாப்பிட்டு போகணும். சரி..நமக்கு எதாச்சும் கிடைக்கனும்னா நாமதான் போராடியாகனும்னு,நாமதான் பேசியாகனும்னு Last Appraisal அப்போ எங்க குல தெய்வத்த வேண்டிக்கிட்டு என்னனெனமோ ட்ரை பண்ணேன்ங்க,ம்ஹூம் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல.

ஆஃபிஸ் டைம்ல Net, ICICI Direct, Orkut, Chat-ஏ கதினு கெடந்தவங்கலாம் இப்போ எங்கயோ. அதுனால இந்த டைம் சத்தியாகிரகம்தான். பேசவே பொறதில்ல. என்ன வேணாலும் சொல்லிக்க. நான் ஒரு வார்த்தை சொல்லப்போறதில்லனு முடிவே பண்ணிட்டேன். ஆனாலும் எதாச்சும் ஒரு வகைல எதிர்ப்பு காட்டியே ஆகணுமே. அதுனால எப்படியாச்சும் மீட்டிங்க வெள்ளிக்கெழமைக்கு தள்ளிப்போட்டு கீழ இருக்கறமாதிரி எதாச்சும் மெசேஜ் இருக்கற t-shirt ஒண்ணு போட்டுட்டு போயிடலாமானு இருக்கேன்ங்க. நீங்க என்ன சொல்றீங்க?









கடைசியா என் Cubicle-ல இந்த படத்தை பெருசா மாட்டலாம்னு ஒரு ஐடியால இருக்கேன். எனக்கு வேல எதாச்சும் போச்சுன்னா உங்க கம்பெனில ஒரு சின்ன வேலயாவது வாங்கி குடுத்திடுங்க ப்ளீஸ்………


மக்களே…தயவுசெஞ்சு என் டேமேஜர்கிட்ட போட்டு குடுத்திடாதீங்க. என்ன நம்பி ஒரு அம்மா,ஒரு அப்பா,ஒரு தங்கச்சி, ஒரு நாய்க்குட்டி (சுப்பிரமணி) இருக்காங்க . எனக்கு இருக்கற Nano size மூளைக்கு வேற எந்த கம்பெனிலயும் கண்டிப்பா வேல குடுக்கவே மாட்டான்.

Friday, October 26, 2007

'லோகோ'ஸ் பத்தி கொஞ்சம்..

1)
இந்த NDTV லோகோவ எல்லாரும் பாத்திருப்போம். அதுக்கும் NDTV ஓட நிறுவனர் ப்ரணாய் ராயின் மனைவிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.


இது NDTV லோகோ.











இது ப்ரணாய் ராயின் மனைவி ராதிகா ராய்.







இப்போவாச்சும் சம்பந்தம் தெரியுதா??
அந்த Nக்கும் Dக்கும் நடுவுல இருக்கற சிவப்பு கலர் பெரிய புள்ளி ராதிகா ராய் வைக்கிற பொட்ட(bindi)-ஓட Inspirationனாம். எல்லாரும் பாத்துக்கோங்க சார். பொண்டாட்டிக்கு ஐஸ் வைக்க என்னலாம் பண்ணவேண்டி இருக்கு.

2)

மேற்கோள் குறி இருக்கே..அதாங்க தலைகீழான கமா( ,) அது ஒரு வார்த்தையயோ, இல்ல ஒரு வாக்கியத்தையோ நாம பேசறப்பவோ, எழுதறப்பவோ சொல்ல வந்த மேட்டர சிறப்பிச்சு(Specify)குறியிட்டு காட்ட உதவுது. 1997-ல இந்த கம்பெனி இந்த தலைகீழான கமா( ,)வ ஒரு வட்டத்துகுள்ள வச்சு தன்னோட லோகோவா அறிமுகபடுத்துனாங்க. அவங்க இந்த லோகோனால என்ன சொல்ல வராங்கனா நாம பேசறத நிறுத்தவே கூடாதாம். பாதிப்பேர் நம்ம ஊர்ல ஏற்கனவே செல்ஃபோன காதுல செல்லோடேப் போட்டு ஒட்டிட்டுதான் இருக்காங்க. இதுல லோகொ வேற இப்படி இருந்தா கேக்கவா வேணும்.

இதுதாங்க அந்த லோகோ. வோடஃபோன் தான் அந்த கம்பெனி. So,பேசு இந்தியா..பேசு (ஓ, இது Reliance Adல…!!!)

3)

யாஹூ(Yahoo - Yet Another Hierarchical Officious Oracle)வோட நிறுவனர்கள் Jerry Yang and David Filo-வும் யாஹூங்கற பேர ட்ரேட்மார்க்குகாக விண்ணப்பிச்சப்போ அதே பேர்ல EBSCO அப்படிங்கற கம்பெனி ஏற்கனவே ஒரு சமோசால ஊத்திக்கிற Sauce-காக பதிவு பண்ணி வச்சிருந்தாங்களாம். ஆனா ஒரு முடிவு எடுத்தாச்சுன்னா நம்ம பேச்ச நாமளே கேக்கமாட்டோமே. அதுனால அந்த Trademark-அ வாங்கறதுக்காக Yang-உம் Filo-வும் என்ன பண்ணாங்க தெரியுமா? இப்போவாவது தெரிஞ்சதா??..கரெக்ட். ஒரு ஆச்சரியகுறிய பேருக்கு கடசில வச்சுட்டாங்க. அவளோதான்..வேல முடிஞ்சது.

4) லினக்ஸ்(Linux)ஓட லோகோ செம க்யூட்டான பென்குயின். Linux-ஓட லோகோவா சுறாமீன்,நரி,கழுகு,பருந்து இதுல எதாச்சும் ஒண்ண வச்சிக்கலாம்னு யோசிச்சாங்கலாம். ஆனா Linux-ஓட நிறுவனர் Linus Torvaldsக்கு பென்குயின் ரொம்ப பிடிக்கும்,ஏன்னா அது fat, cute and cuddly றதால அதயே வச்சிட்டாராம். இதோட பேரு ‘Tux’ (Torvalds UniX –TUX).வருங்காலத்துல நானும் எதாச்சும் தப்பித்தவறி கண்டுபிடிச்சா அதுக்கு எங்க வீட்டு நாய் ‘சுப்பிரமணி’ பேர வக்கப்போரேன்.

5) இந்த லோகோல பேருக்கு கீழ ஒரு அம்புக்குறி இருக்கே…நோட் பண்ணிருக்கீங்ளா? இது சும்மா ஒண்ணும் வக்கல. Amazon.com-ல அ முதல் ஃ (அதாவது a to z) வரைக்கும் எல்லாமே இருக்கும்னு மறைமுகமா சொல்லவராங்கலாம். அதும் இல்லாம அது Smiley மாதிரி இருக்கறது கஸ்டமர்ஸ் முகத்துலயும் சிரிப்ப வரவக்குமாம். என்னமா யோசிச்சிருக்காங்கல்ல.

6) இந்த லோகோ ரொம்பவே பிரபலமான ஒண்ணுங்க. இந்த Nike கம்பெனியோட லோகோ ‘Nike’ அப்படினு பேரு இருக்கற ஒரு கிரேக்க வெற்றி தேவதையோட சிறகுகளை குறிக்குதாம்.இத 1995ல தான் ட்ரேட்மார்க்கா பதிவு பண்ணாங்க. இந்த லோகோவும், ஸ்லோகன் ‘Just Do It’(எதயாச்சும் பண்ணித் தொலயுங்களேண்டா)வும் தான் கம்பெனியோட வெற்றிக்கு ரொம்பவே உதவிச்சாம்.

7) இது எந்த கம்பெனியோட லோகோனு தெரியுதா? ஜானி வாக்கர் அப்படிங்கற ஒரு 15 வயசுப் பையன்(இந்த வயசுலயேவா..!!!!) Kilmernockங்கற ஸ்காட்லாண்ட் டவுன்ல விஸ்கி பண்ணி விக்க ஆரம்பிச்சானாம். அவரு இறந்தப்போ அவரோட இந்த விஸ்கிதான் ஸ்காட்லாண்ட்ல பயங்கர பாப்புலராம். இதோட பேரு ஆரம்பத்துல ‘Old Highland Wishky’ . அப்புறம் 1820ல இதோட லோகோ உருவாக்குனாங்க ஜானி வாக்கரோட நியாபகமா. இதோட ஸ்லோகன் - Johnny Walker - Keep on Walking . தண்ணி அடிச்சா மல்லாக்க படுக்கதான் முடியும். அது எப்படிங்க இவங்க நடந்துக்கிட்டே இருடானு சொல்றாங்க…அனுபவப்பட்டவங்க கொஞ்சம் எப்படினு சொல்லுங்களேன்.

8)
ஜெர்மன் கார் கம்பெனி Audi-யோட நாலு வளையங்களுக்கும் ஒலிம்பிக்குக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. நான் கார்ல இருக்கற நாலு சக்கரங்கள்தான் தான் அந்த நாலு வளையங்கள்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, அதோட அர்த்தம் 1932-ல 4 தனித்தனியான(Audi, DKW, Horch and Wanderer) மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட Merger-அ குறிக்கிறதுக்காகத்தானாம். நம்ம ஊர்ல அரசியல்வாதிங்க கூட்டு சேந்தா கைய தூக்கி காம்பிப்பாங்ளே. அதுமாதிரி. இந்த கம்பெனி ஆரம்பிச்சு 100 வருஷத்துக்கும் மேல ஆகுதாம். இன்னொரு மேட்டர்….Audi-னா லத்தீன் மொழில ‘Hear’-னு அர்த்தம். அதுல இருந்து தான் ‘Audience’ங்கற வார்த்தை வந்தது.
9)

Toyoto-வோட லோகோ just வளையமா இருக்கற ‘T’மாதிரிதான இருக்கு. ஆனா அது ஆக்சுவலா 3 நீள்வளையங்களால ஆனது. ஒரு வளையம் கஸ்டமர்ஸயும், இன்னொன்னு கார்(Product)யும், மூணாவது பெரிசா இருக்கற வளையம் எப்போதும் பெருசாகிட்டே போற தொழில்துறை வளர்ச்சியையும் குறிக்குதாம்.

10)பேரே செம ஸ்டைலா இருக்குல. இந்த கெத்தான இத்தாலி கார் கம்பெனியோட லோகோவா ஏன் காளைமாட வச்சிருக்காங்க?? அது ஒண்ணும் இல்லங்க. ஸ்பெயின்ல இருக்கற ஒரு ‘காளைமாட்டு வளர்ச்சி பண்ணை’ (Bull breeding Estate-அ எப்படி தமிழ்ல சொல்றது :) இருந்த மாடுகளோட இனப்பெயர வச்சுதான் Lambhorghini Miura and Lambhorghini Murcielago அப்படிங்கற கார் பேரெல்லாம் வச்சாங்களாம். அப்படியே அந்த மாட்டோட படத்தையே லோகோவாவும் வச்சிட்டாங்க. நம்ம ராமராஜனோட ரசிகர்கள் போலருக்கு. ஆமா, அவரு என்ன ஆனாருங்க, ஆளையே காணோம்.



Thursday, October 18, 2007

இவங்கள எங்கயாச்சும் பாத்திருக்கீங்களா??

இவங்க நடிகை கிடையாது. சமூக சேவகி,பாப் பாடகி இல்ல. அரசியல்வாதியும் ம்ஹூம். அவங்க உண்மைல ஒரு ரொம்பவுமே சாதாரமான பொண்ணுதான். ஆனா அவங்க எங்க இருக்காங்கனு தேடின மாதிரி வேற யாரையுமே தேடிருக்க மாட்டாங்க. நான் ஜூன் - 1985 ‘National Geographic’இதழோட அட்டை படத்துல வந்த பொண்ணப் பத்திதான் பேசிட்டு இருக்கேன். அவங்க ஏன் அவளோ ஸ்பெஷல்னு கேக்கறீங்களா??? இதோ கீழ இருக்கறதுதான் அந்த பொண்ணோட ஃபோட்டொ….

என்னா கண்ணு இல்ல???? ம், அதுக்காகதான் அந்த பொண்ணு பிரபலமானதே. Steve McCurry அப்படிங்கற ஒரு பத்திரிக்கைகாரர் ஆப்கானிஸ்தான்ல நடந்த போர் பத்தின செய்திகளை சேகரிச்சிட்டு இருந்தப்போ ஒரு அகதி பொண்ணோட ஃபோட்டோவ பிடிக்க ரொம்பவும் அரிதா ஒரு வாய்ப்பு கெடச்சிருக்கு. அங்க பக்கதுல ஒரு அகதி முகாம்ல இருந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஃபோட்டொ பிடிக்கலாம்னு போயிருக்காரு. அப்போ ஒரு 12 வயசுல ஒரு குட்டி பொண்ண பாத்ததுமே அந்த பொண்ண ஒரு போஸ் குடுக்க சொல்லி இந்த படத்த எடுத்திருக்காரு. அவர் அத எடுத்தப்போ அந்த படம் எந்த மாதிரியான ஒரு பரபரப்ப ஏற்படுத்த போகுதுனு அவருக்கே தெரிஞ்சிருக்காது. அந்த பொண்ணோட பேரயும் அவர் கேட்டுக்கல. அந்த படம் வெளி வந்தப்போ அதோட பேரு ‘The Afgan Girl’னு வச்சுட்டாங்க. இந்த பொண்ணோட கண்களைப் பார்த்த அப்புறம் தான் உலகத்துக்கே அந்த போரோட கொடூரம் தெரிய ஆரம்பிச்சது. அந்த கண்கள்ல இருந்தது பயமா?தனிமையான உணர்வா?, இல்ல எல்லாரும் இங்க செத்து பொழச்சிட்டு இருக்கோம்..நீங்க உங்க வீட்ல ஜாலியா உக்காந்திட்டு இந்த புக்க படிச்சிட்டு இருக்கீங்க அப்படிங்கற ஒரு வெறுப்புணர்வா? எல்லாம் சேந்து இந்த படம் ‘உலகையே மாற்றிய படங்’கள்ல ஒண்ணா வந்திடுச்சு.
அதுக்கப்புறம் இந்த பொண்ண தேடிக்கண்டுபிடிக்க நிறையவே முயற்சிகள் நடந்ததாம். பேருகூட தெரியல அப்படிங்கறதால யாருக்குமே எந்த விபரமும் தெரியல.
அப்புறம் ஜனவரி 2002 ல ‘National Geographic’ magazine-ல இருந்து ஒரு படையே கெளம்பிருக்கு. எப்படியாச்சும் இந்த பொண்ண கண்டுபிச்சே ஆகனும்னு கங்கணம் கட்டாத குறையா. அந்த பொண்ணோட அகதியா வந்தவங்க ,அவ தங்கி இருந்த அகதிகள் முகாம்ல இருந்தவங்க அப்படி இப்படினு நெறய பேர இந்த படத்தக்காட்டி கேட்டிருக்காங்க. இதுல நெறய பொண்ணுங்க நாந்தான் இவ-னு சொல்லிட்டு வந்திருக்காங்க. கொஞ்சம் பசங்க ஒரு படி மேல போயி இந்த பொண்ணு என்னோட பொண்டாட்டி அப்படினு சொல்லிருக்காங்க. Steve எவளோ கடுப்பாகிருப்பாரு. பேசாம தமிழ்ப்பட ஹீரோஸ் கிட்ட ஃபோட்டோவ குடுத்திருந்தா போதும். அடுத்த நாளே பொண்ண எங்க இருந்தாலும் தூக்கிட்டு வந்திருப்பாங்க.
அப்புறம் ஒரு வழியா ரொம்பவுமே கஷ்டப்பட்டு அந்த குட்டிப்பொண்ணு மாதிரியே இருக்கற ஒரு பொண்ணக் கண்டுபிடிச்சாச்சு. அவளுக்கு இப்போ வயசு 30க்கும் மேல. அவள முன்ன மாதிரியே போஸ் குடுக்க சொல்லியும் அந்த பழய கண்ணோட பவர் வரலயாம். இதுதாங்க இப்போ அந்த கண்ணழகி.
ஆக்சுவலா அந்த பொண்ணுக்கே அவள அடையாளம் தெரியல. நம்மள மாதிரி ஒரு பாஸ்போர்ட் ஃபோட்டொ எடுத்தா கூட ஊரெல்லாம் ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ சொல்லிட்டு இருக்கறவங்க இருக்கறப்போ அவளுக்கு தன்னோட படத்த உலகம் முழுசுமே பாத்திருக்காங்க அப்படிங்கறது கூட தெரியல. ஆனா அவளுக்கு அந்த ஃபோட்டொ எடுத்த நியாபகம் மட்டும் இருந்திருக்கு. அது அந்த பொண்ணுதானானு அந்த படத்துல இருந்த அவங்க கண்ணோட விழித்திரையில இருந்த கோடுகள வச்சு செக் பண்ணிக்கிட்டாங்களாம்.
அப்புறம் இந்த பொண்ணப் பாத்தி ரொம்பவுமே டீடெய்லா எல்லாம் எழுதியாச்சு. இந்த படம் எடுத்ததோட நியாபகமா இந்த போரால பாதிக்கப்பட்டவங்ககளுக்காக ‘Afgan Girls Fund’ –னு லாம் ஆரம்பிச்சாங்க. அவங்கள கண்டுபிடிச்ச கதைய National Geographic ‘Search for Afgan girl’-னு ஒரு Documentry-யா வெளியிட்டாங்க. இப்போ இந்த பொண்ணு ரெண்டு குட்டி பசங்களுக்கு அம்மா.
இந்த பொண்ணோட பேரு நான் சொல்லவே இல்லயே…..Sharbat Gulam


சரி….அதெல்லாம் இருக்கட்டும்..இந்த குட்டிப்பையனோட கண்கள் எப்படி இருக்கு???

Monday, October 15, 2007

ஆபிஸ் டைம்ல இத படிச்சிட்டு இருக்கீங்களா???

எல்லா சாப்ட்வேர் ஆபிஸ்லயும் எல்லாரும் ரொம்பவே பிசியா இருக்கற மாதிரி இருக்கும். ஆமாங்க, அவங்க பிசியாதான் இருக்காங்க…..ஃபிரண்ட்ஸ் கூட சாட் பண்ணிகிட்டு, ஆன்லைன்ல கேம்ஸ் ஆடிட்டு, பங்கு சந்தைல முதலீடு பண்ணிட்டு, ப்ளாக்ஸ்(!!!!!) போட்டுட்டு இல்லனா படிச்சிட்டு, மெயில் பண்ணிட்டு, இல்லனா சும்மாவாச்சும் Google, Wiki-ய லாம் நோண்டி தன்னோட அறிவ பெருக்கிட்டு இருக்காங்க. அப்புறம் இருக்கவே இருக்கு Orkut, Face Book, My Space. மொத்தத்துல ஆணி பிடுங்கறத தவிர வேற எல்லா வேலயும் பாக்கறாங்க. இந்த மாதிரி ஆபிஸ் டைம்-ல வெட்டி வேல பாத்திட்டு இருக்கறதுக்கு ஒரு பேர் இருக்குங்க. அது தான் ‘Cyber Slacking’.

நம்மாளுங்க நெறய பேரு ஆர்க்குட்ட ஒரு வாரம் ஆனாலும் Sign-out பண்றது இல்ல. ‘ஆபிஸ்ல தான் இருக்கியா’, ’உங்க வீட்டு நாய் குட்டி போட்டுடுச்சா’, ’பக்கத்து cubicle பொண்ணுகிட்ட எதோ பேசணும்னு சொன்னியே’ இப்படினு முடிவிலியா பேசிகிட்டே இருக்காங்க. சிலபேரு ‘Can I be your friend????’-னு பொண்ணுங்களுக்கு scrap பண்றதயே ஒரு வேலயா வச்சிட்டு இருக்காங்க. அதுக்கு அவளும் ‘Have we met??’-னு ஒரு ரிப்ளை. அவந்தான் ஒரு தடவ ஆர்க்குட்ல நொழஞ்சா கொறஞ்சது ஒரு 50 பொண்ணுங்களுக்காவது இந்த scrap-அ அனுப்பிட்டுதான் வேற வேல பாக்கறானு தெரியுதுல்ல. இந்த ரிப்ளை ரொம்ப அவசியமா??? Orkut-அ உருவாக்குன ஆர்க்குட் பயுக்கோக்டன்(வாய் சுழுக்கிக்கிச்சி) ஏதோ புதுசா பண்ணனும்னு எவளொ கஷ்டப்பட்டு இத பண்ணிருப்பாரு…ஆனா நம்ம ஆளுங்க உடனே அவரு சின்ன வயசுல சைட் அடிச்ச ஃபிகர்-அ திரும்ப கண்டுபிடிக்கிறதுக்காகதான் இதயே உருவாக்கிருக்காருனு அதுக்கு கண்ணு,காது,வாய்,மூக்கு எல்லாம் வச்சு ஒரு ஃபார்வார்ட் மெயில் அனுப்பறாங்க. அத நாமளும் வாய தொரந்து படிச்சிட்டு ‘ஆஹா,என்னே காதலின் மகிமை’-னு ஃபீலிங்ஸ் விட்டுட்டு இருப்போம்.
அப்புறம் இந்த மெயில் பண்றது. நமக்கு inbox-அ 5 நிமிசத்துக்கு ஒருதடவ refresh பண்ணனுங்கறது ஒரு அனிச்சையான விசயம் ஆகிடுச்சு. ஆபிஸ்க்கு வந்ததும் ஒரு சொத்தையான ‘Good Moring’ mail. வெள்ளிக்கெழம ஆச்சுனா ஏற்கனவே 1008 தடவ ஃபார்வேர்ட் ஆன ‘Happy Weekend’ மெயில். ரெண்டு நாளும் பெருசா என்னமோ பண்ணபோற மாதிரி. தின்னுட்டு தின்னுட்டு தூங்க பொறதில ஒண்ணும் கொறச்சல் இல்ல. அப்புறம் ‘டேய், உங்களுக்கு ஒண்ணு தெரியுமானு’ ஒருத்தன் Chain Mail ஆரம்பிச்சா போதும். அத வச்சே 5 நாலும் ஓட்டிடுவாங்க நம்ம பசங்க. இந்த லட்சணத்துல ‘இந்த மெயில நீ 100 பேருக்கு ஃபார்வேர்ட் பண்ணல மவனே நீ ரத்தம் கக்கி சாவ’னு ஒரு மெயில் வரும். நம்மாளுங்களுக்கு கேக்கவா வேணும். சாமிக்குத்தம்னு கண்ணத்துல போட்டுகிட்டே 100 என்ன 200 பேருக்கு அத ஃபார்வேர்ட் பண்ணுவான். என்ன கொடும சாமி இது???? அப்புறம் இந்த ‘Bill Gates sharing his fortune’ மாதிரியான மெயில். அவன் என்ன கேணகிறுக்கனா நம்மள மாதிரி, சும்மா பணத்த அள்ளி கொடுக்க. யாஹூ Messenger-அ நெறய ஆபிஸ்ல தடை பண்ணி என்னங்க பிரயோஜனம். அதான் இருக்கவே இருக்கு G-talk. இத பத்தி சொல்லவே வேண்டாம். என்ன, ஒரே டைம்ல 5 G-talk windows blink ஆகிட்டு இருக்கா உங்களுக்கு இப்போ…ம்ம்ம். அப்போ கண்டிப்பா நீங்க ஒரு ‘Cyber Slacker தான்.


ஆபிஸ் டைம்ல கொறஞ்சது 20%-அ நம்மாளுங்க இந்த மாதிரி அவங்க சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திகிறாங்கலாம். இந்த அளவு நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வேற போகுதாம். ‘Trade Me’ அப்படிங்கற Stock Market site-அ 700,000 ப்ரெளசர்ஸ் விசிட் பண்ணிருக்காங்க. கம்பெனி டைம்ல இது சராசரியா 27 நிமிசம். இத எல்லா Employees-க்கும் கண்க்கு போட்டா 323,000 மணி நேரம் வருது. So, எல்லாம் சேத்து 37 வருஷம் கம்பெனியோட Productivity போயே போச்சு.
நம்ம ஆளுங்க கிட்ட இந்த மாதிரி ஏன் ‘Cyber Slackers-அ இருக்கீங்கனு கேட்டா’ என்ன தெரியுமா சொல்லிருக்காங்க. They are Bored, Over-worked, Under-Paid and Unchallenged at work-னு. நெறய கம்பெனிங்க இந்த மாதிரி ‘Cyber Slacking’-அ தடுப்பதற்காக நெறய ட்ரை பண்றாங்களாம். ரகசியமா கேமரா வக்கிறது, Site-Filters பயன்படுத்தறது,மெயில் அனுப்பறத Track பண்றது. எவளோ Bandwidth பயன்படுத்திருக்காங்கனு ,என்னென்ன Files-லாம் Internet-ல இருந்து இறக்குமதி பண்ணிருக்காங்க பாக்கறது இப்படி நெறய. ஆனா நம்ம பசங்க என்ன லேசுப்பட்டவங்லா என்ன?? நமக்கு தான் இதுலாம் ஜுஜுபி ஆச்சே. எதுலாம் பண்ண வேண்டாம்னு சொல்றாங்களோ அத தேடி தேடி போய் பண்றவங்களாச்சே நாம.

இதோ இங்க இருக்கற மாதிரிதான் நாம ஆணி பிடுங்கற டைம இண்டர்னெட்ல waste பண்றோமாம்பா…சொல்லிகிறாங்க.

அப்புறம் மக்களே, இந்த ஆபிஸ் டைம்ல போன் பேசறதுலாம் இந்த ‘Cyber Slacking’ கணக்குல சேராது.அதுனால் எந்த பொண்ணாவது ஆபிஸ் டைம்ல போன் பேசிட்டு இருந்தா, ‘Hey uuu…cyber slackerrrr...’-னு சண்டைக்கு போகாதீங்க. ஆபிஸ் டைம்ல ஃபோன் பேசறதுலாம் பெண்களோடப் பிறப்புரிமை. சரியா??

Monday, October 8, 2007

சிம்பு...அழுவாத,ப்ளீஸ்!!!!!!

(இந்த கான்வெர்சேசன் நம்ம வ(சி)ம்பு(!!!) ஜோடி நம்பர் -1 செட்லருந்து வந்ததும் நடந்தது)

வம்பு : அப்பா…பாருப்பா…எல்லாரும் என்ன திட்டிட்டே இருக்காங்க…ம்ம்ம்...நா அழுவேன் போ…நா உண்மையதான சொனேன். அதுக்கு ஏன் திட்டராங்க???

டி.ஆர் : டேய் மவனே…என்கிட்டயேவா???? என் மவனே சிம்பு…உனகேண்டா வம்பு…வேணும்னே உனக்கு விடுறாங்கடா அம்பு…

வம்பு : போப்பா…நீ தான் எல்லா அரட்டை அரங்கத்துலயும் அழுது நல்ல பேரு வாங்கிக்கிர….அதான் நானும் அத ட்ரை பண்ணேன். ஆனா அத எல்லாரும் சேந்து காமெடி பண்ணிட்டானுங்க.

டி.ஆர் : டேய்…அழற எடத்துல தாண்ட அழணும்….ஆடற எடத்துல போயி அழுதுட்டு இருந்தா இப்படிதான் ஆகும். ஆமா, நா உன்கிட்ட என்னிக்காவது சொல்லிருக்கேனா ‘பொது எடத்துல நடிக்ககூடாது’னு??? ஏண்டா உன்னோட கேவலமான டயலாக்லாம் நா சொன்னதா சொல்லிட்டு திரியர…..அதுவும் கைய கால ஆட்டி அதுக்கு ஒரு எஃபெக்ட் வேற….மானம்போகுது.

வம்பு : போப்பா…எல்லாரும் என்ன திட்டறீங்க…நயன்தாரா திட்டுச்சு. பிருத்வி திட்டறான்…..இப்போ நீ திட்டற..நானும் என்னதான் பண்து????

டி.ஆர் : ஆமா...நீ பண்ற வேலக்கு உன்ன திட்டாம என்ன பண்ணுவாங்க….ஏண்டா, ஒரு விஷயத்தயாவது ஒழுங்க ‘பன்றி’யா நீ???? எதோ ஒன்றயணா பல்லுசெட்டு வாங்கிட்டு வந்து கெட்-அப் சேன்ஞ்ச்-னு என்கிட்டயே நீ ஃபிலிம் காட்டற..ம்…..அவதான் உன் லவர்-னு ஊர் முழுக்க தண்டோர அடிச்சேல்ல…அப்புறம் ஏண்டா அந்த பொண்ண அந்த அளவுக்கு கேவலமா படத்துல காட்டற…சரி அதாவது போகட்டும்…இந்த ஃபோட்டோ, ஃபோன் கான்வெர்சேசன்லாம் இண்டர்நெட்ல போடரது….அப்புறம் அது நானே இல்ல, இது எங்கப்பா மேல சத்தியம்-னு என்ன கொல்லப்பாக்கரது. ஏன் உனக்கு இந்த கொலவெறி???

வம்பு : லூசு அப்பா….இப்போ நீ ஏன் பழய மேட்டர்க்குலாம் போர….நானே என் நயன் போன துக்கத்துல இருந்து இன்னும் மீளாம இருக்கேன். அதுல இருந்து வெளிய வரதுக்குதான் நான் இந்த மாதிரி எல்லாம் பண்ணி என்ன நானே தேத்திக்கிறேன்.

டி.ஆர் : யாரு??? நீ??? இதெல்லாம் கேக்கணும்னு என் நேரம்டா. எல்லாரும் ஒரு மார்க்கமா தாண்டா அலயறேங்க…ரஜினி பொண்ணுக்கே ரூட்டு விட்டவந்தான நீ…பாவம், கடசி நேரத்துல அந்த பொண்ணு தப்பிச்சுகிச்சு.

வம்பு : அப்பா…ரஜினி மாமாக்கு இன்னொரு பொண்ணு வேற இருக்கு..மறந்து விட்டீர்களா…ஹாஹா….

டி.ஆர் : இங்க பாரு மவனே…உனக்கு இருக்கற கிரிமினல் மூளக்கு பேசாம என்னோட கட்சியில சேந்திடு. நாளய சமுதாயம் இளைஞர் கையிலேனு நாம பிரச்சாரம் பண்ணா ஒவ்வொருத்தானும் பிச்சுகிட்டு வந்து ஓட்ட போடணும். ‘முதல்வர் சிம்பு’ கேக்கவே எவளோ குளிர்ச்சியா இருக்கு

வம்பு : எனக்கு கொல நடுங்குது…உன்னதான் எவனுமே மதிக்கிறதில்லல…உன்னோட கட்சில நீயும், மும்தாஜ் மட்டும்தான் இருக்கீங்க. எனக்கு மும்தாஜ் சித்தி சைச பாத்தாலே உயிர் போய் உயிர் வருது.பேசாம இந்த கட்சி,பட்சி எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வா. இனிமே வரப்போற என் படம்ஸ் (மானம்)கெட்டவன்,(தோசை)சுட்டவன்,(லிப்ப)கடிச்சவன் எல்லாத்துலயும் ஒரு பாட்டு பாட சான்ஸ் தரேன்.பாட்டு கடைசில நான் ‘பின்னிட்டீங்க’,’பிரிச்சீட்டீங்க’,’பொளந்துட்டீங்க’,’எரிச்சுட்டீங்க’-னு கமெண்ட் கூட சொல்றேன்.

டி.ஆர் : டேய்…என்கிட்டயே உன் வேலய காட்டறய நீ…நானெல்லாம் ஹீரோயின தொடாமயே நடிச்சவண்டா..

வம்பு : கிளிச்ச..உன் ஹீரோயின்ஸ் பொடற ட்ரெஸ்க்கு நீ அவங்கல தொட்டு வேற நடிக்கணுமா. என்னமோ வீராச்சாமிய ஆஸ்கர்க்கு நாமினேட் பண்ணிருக்காங்க மாதிரி பீலா வுட்ர நீ. அதுலாம் ஏன் பேசற நீ..கட்சி வேண்டாம்னா வேண்டாம். ஏண்டா செல்லம் உனக்கு புரிய மாட்டேங்குது. ப்ளீஸ்டா…குட்டிமா…

(‘அய்யய்யோ…இவனுக்கு அடிக்கடி இப்படி ‘Short term Memory Gain’ ஆகுதே ‘ அப்படினு அலறிகிட்டே நம்ம டி.ஆர் ஓடரார்)

டிஸ்கி : மக்களே…இங்க இருக்கறது எல்லாம் கற்பனையே…கற்பனையை தவிர வேற ஒண்ணுமே இல்ல….

Friday, October 5, 2007

தங்க விகிதம்

நம்ம அழகான மூஞ்சிங்க, நம்ம விரல்கள், நம்ம கை, நத்தை, சூரியகாந்திப்பூ, மோனலிசா ஓவியம் இது எல்லாத்துக்கும் ஒரு பொதுவான விசயம் ஒண்ணு இருக்குங்க. அது என்னனு கேக்கறீங்களா?????

அந்த மேட்டர்தான் தங்க விகிதம்(Golden Ratio).

நீங்க இந்த ‘Da Vinci Code’ புத்தகம் படிச்சிருந்தா இத பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். இந்த தங்க விகிதம் அப்படிங்கறது ஒரு விகித எண். இதோட மதிப்பு 1.618. இத ஃபிரான்ஸ்ல இருந்த ஒரு மூளக்காரருதான் கண்டுபிடிச்சிருக்காரு. அவரு கண்டுபிடிச்சப்போ இந்த எண்ணோட மதிப்பு யாருக்கும் தெரியல. ஆனா அவருக்கு பின்னாடி வந்த நெறய புத்தியுள்ள மனுசங்க இந்த எண்ண கொஞ்சம் ஆஃபரேஷன் பண்ணி நெறய உண்மைகள நம்மள மாதிரி மரமண்டைகளுக்கு புரியர மாதிரி சொல்லிட்டு போயிருக்காங்க.

சரி…நாம இப்போ நம்ம மூஞ்சிய பத்தி பாக்கலாம். கீழ இருக்கற பொண்ணோட படத்த பாருங்க.

இதுல நீலம்,மஞ்சள்,பச்சை,ஊதா-னு 4 கலர்ல கோடு கோடா போட்டிருக்கா???
நீல கோடை மஞ்சள் கோடால் வகுத்தால் தங்க விகித எண் (1.618)
அதே மாதிரி…. மஞ்சளுக்கு பச்சை, பச்சைக்கு ஊதா 1.618 .

உங்க கண்களோட பாவைகள்(Pupils) ரெண்டுக்கும் இருக்கற தூரத்த(அல்லது நீங்க புன்சிரிப்பு சிரிக்கிறப்போ உங்க உதட்டோட நுனிகளுக்கு இடையே உள்ள தூரத்த) உங்க புருவங்களோட ஆரம்பங்களுக்கு இடையே இருக்கற தூரத்தால வகுத்தா கிடைக்கிற மதிப்பு தான் தங்க விகிதம். இதோடது 1.618-அ இருக்கணும். அப்படி இருந்தாதான் நீங்க சைட் அடிக்கவோ or சைட் அடிச்ச ஆள பாத்து சிரிக்கவோ லாயக்குனு நம்ம டாவின்சி சொல்ராரு. அதாங்க நம்ம மோனலிசா படத்தை கூட வரஞ்சாரே…அவருதான்.

அப்புறம்,
1)உங்க மேலுதட்டோட நுனியில இருந்து தாடையோட கீழ் நுனி வரைக்கும் இருக்கற தூரத்தையும், உங்க உதட்டோட நுனிகளுக்கு இடையே உள்ள தூரத்தயும் வகுத்தாலும்,
2)உங்க மூக்கோட நீளத்தை, ஒரு கண்ணோட(உங்களுக்கு ரெண்டு கண்ணும் ஒரே அளவுதான??)அகலத்தால் வகுத்தாலும்,
3)உங்க நெற்றிபொட்டுல இருந்து காதோட கீழ் நுனி வரைக்கும் இருக்கற தூரத்தை, உங்க மூக்கோட நீளத்தால் வகுத்தாலும்,
4)உங்க புருவங்களுக்கு இடையே இருக்கற தூரத்தை, உங்க மூக்கின் கீழ இருந்து மேலுதட்டின் நுனி வரைக்கும் இருக்கற தூரத்தால் வகுத்தாலும்,
தங்க விகிதம் தான் கெடக்கணுமாம்.

என்ன தொட்டு பாத்துகிறீங்களா, எல்லாம் கரெக்டா இருக்கானு????? :D


இப்போ இங்க இருக்கற படத்த பாத்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் மேட்டர் இருக்கு.உங்க முன்பற்கள் ரெண்டு இருக்குமே, அந்த ரெண்டையும் சேத்து இருக்கற நீளத்தை, ஒரு பல்லோட அகலத்தால் வகுத்தாலும் தங்க விகிதம் தான் கெடக்கணும்.

என்ன???எல்லாம் கரெக்டா இருக்கா உங்களுக்கு?????? அப்போ நீங்க மன்மதன் and ரதி & co-வோட வாரிசாதாங்க இருக்கணும். காலர தூக்கி விட்டுகோங்க. நீங்க பையனா இருந்தா கீழ இருக்கற பொண்ண தைரியமா கரெக்ட் பண்ணிக்கலாம். ஏன்னா இந்த பொண்ணுக்கு மேல சொன்ன எல்லாமே பொருந்துதாம். இவங்க ஒரு a true “mathematical beauty” with facialmeasurements fitting a Golden Ratio.


Thursday, October 4, 2007

அழகின் அளவு

மில்லிஹெலன் அப்படிங்கறது அழகோட அளவுங்க. அதாவது இப்பொ நீளத்தை அளக்க மீட்டர் மாதிரி அழகை அளக்க மில்லிஹெலன்.
இந்த வார்த்தை எப்படி வழக்குல வந்துச்சுனா, கிரேக்க நாட்டுல ஹெலென் ஹெலென்னு(Helen) ஒரு செம ஃபிகர் இருந்ததாம்.
அவ ஒரு பரிபூரணமான அழகுடையவளாம். அவள பின்னாடி ‘Troy of Helen’னு கூப்பிட்டாங்க. Troy-னு கூட 2004ல ஒரு ஆங்கில படம் வந்ததே. அதுல கூட ஒரு ஹெலன் வருவாளே. அவள பத்திதான் இப்போ பேசிட்டு இருக்கோம். அவ ஒருடைம் Paris நகரத்திற்க்கு கடத்தப்பட்டாளாம். அப்போ Troy நகரத்தில இருந்து அவள காப்பாத்திட்து வரதுகாக 1000 கப்பல்கள் கெளம்பிச்சு. So அழகோட அளவு 1000மில்லிஹெலென்(1000mH)ஆச்சாம். அதாவது 1000 மில்லிஹெலன் = 1 ஹெலன். புரிஞ்சதா??? இது ஏன் 1மில்லிஹெலன்னு சொல்ராங்க, ஹெலன்னேசொல்லலாம்ல. அது முடியாது,ஏன்னா யாருமே 1 ஹெலன் அழகுடயவங்களா இருக்க முடியயதாம். அத விட கம்மியாதான் எல்லாரும் இருப்பாங்களாம். அதானாலதான் சுலபமா இருக்குமேனு அது மில்லிஹெலன் ஆச்சு.

இவதாங்க அந்த கிரேக்க Helen Of Troy.


இந்த பொண்ணு தான் நாம பாத்த Troy படத்தில Helen-அ நடிச்சது.

(ஆனா இவள பாத்தா அவளோ அழகா தெரியலல????????)


இந்த அளவுல நேர்மறை,எதிர்மறை(+ve,-ve)அளவுகளும் இருக்கு. அது என்ன எதிர்மறை மதிப்புனு கேக்கறீங்களா??? ஒரு பொண்ண(ஏன் பையனா இருக்க கூடதானு சண்டைக்குலாம் வரகூடாது…சரியா ;) ) காப்பாத்திட்டு வர 1 கப்பல் போச்சுன்னா அவ 1 மில்லிஹெலன் அழகுடையவள். இது +ve value(+1mH). இதே ஒரு பொண்ண பாத்து 1 கப்பல் கவிழ்ந்துச்சுன்னா அவ -1மில்லிஹெலன் அழகுடையவள்(-1mH). இது -ve value. புரிஞ்சதா? அப்போ நீர்மூழ்கி கப்பல்லாம் எந்த கணக்குல சேத்தினு எடக்குமுடக்காலாம் கேக்ககூடாது.



இப்போ இங்க இருக்கற பொண்ணோட மில்லிஹெலன் அளவு -3mH. இவ பேரு Phyllis Diller. அதாவது இவளோட கடைக்கண் பார்வை பட்டு 3 கப்பல் மூழ்கிடுச்சாம்.


இந்த பொண்ணோட மில்லிஹெலன் அளவு +835mH. இவ பேரு Fannke Jannsen.






ஆமா…நம்ம local தேவதைகள் அசின்,திரிஷா,நயன்தாரா,நமீதா(??) லாம் எவளோங்க இருப்பாங்க?????



இந்த பொண்ணு வந்தப்போ நல்லாதான்ங்க இருந்திச்சு. ரஜினி படத்திலலாம் ஓவாரா சிரிச்சே வாய் பெருசாகிடுச்சு. அதுவும் இல்லாம சிம்பு கூட வேற ஜோடியா நடிச்சாங்க. கேக்கவா வேணும்??? ஒரு 100mH பத்துமா இவங்களுக்கு???


நம்ம ஊரு திரிஷா வந்தபுதுசுல கன்றாவியா இருந்ததுங்க. ஆனா இப்போ செம அழகாயிடுச்சு. So மக்களே நீங்களும் ECR-la friends-ஓட போய் Fanta குடிச்சிட்டே நல்லா ஆட்டம் பொடுங்க. அழகாயிடுவீங்க :P . Of Course, Make-Up கண்டிப்பா போடணும். அப்போ திரிஷாக்கு ஒரு 80mH போடலாமா???


நம்ம அசின்தான?? கேக்கவே வேணாம். 10 mH போதும்.









No Comments !!!!!!!!!

Wednesday, October 3, 2007

மர்லின்

மர்லின் மன்றோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. The most Beautiful lady என்று வர்ணிக்கப்பட்டவர். வெற்றிகரமான நடிகை என்று அழைக்கப்பட்ட போதிலும் இவரது வாழ்க்கை பல ஆச்சரியங்கள் நிறைந்தது. மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து மேற்க்கத்திய படவுலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் மர்லின் என்ற நோர்மா.ஒரு Foster home-ல் தான் தன் இளமை பருவத்தை களித்தார். பின் ஒரு போர் விமானங்கள் செய்யும் தொழிற்ச்சாலையில் முதல் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு புகைப்பட கலைஞர் 'போரில் பெண்களின் பங்களிப்பு' என்ற கருத்துக்காக புகைப்படங்களை எடுத்து கொண்டிருந்தார். அவர் நோர்மா வையும் சில படங்களை எடுத்தார். அதில் சில படங்களை பார்த்த ஒரு மாடலிங் நிருவனம்தான் நோர்மாவை மாடலிங் உலகிற்க்கு அறிமுகபடுதியது. மாடலிங் உலகிற்க்கு வந்ததும் இவரது பெயர் வர்த்தக உலகதிற்க்கு ஏற்றதாக இல்லை என்று தன் பெயரை மர்லின்( on bahalf of Marylin Miller) மன்றோ(தன் அம்மாவின் முதல் பெயர்) என மாற்றி கொண்டார்.


(என்னா கண்ணுங்க….chance e illa)
அதன் பின் மர்லின்க்கு ஆங்கிலத்தில் சொல்வது பொல 'No Looking Back’'. மாடலிங்கை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தன. ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனர். இவரது கடைகண் பார்வைக்காக தவமிருந்தனர் பலர்.
இவரது 'The Seven Year Itch' என்ற திரைப்படத்தில்தான் இவரது புகழ் உச்சிக்கு சென்றது. 'The Most Iconic Image of the 20th century' என்று அழைக்கபட்ட இவரது இந்த புகைப்படம் இவரை உலகபுகழ் அடைய செய்தது.

(இந்த pose-அ கூட நம்ம ரம்பா காப்பி அடிச்சதே ‘அழகிய லைலா’ பாட்டுல…)
இவரது 4 திருமணங்களும் வெற்றிகரமானதாக இல்லை. தனது வாழ்நாளின் கடைசி கட்டங்களில் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார் ஜான்.F.கென்னடியுடன் இவர் கொண்டிருந்த ரகசிய காதல் உலகமறிந்த (!!!) ஒன்று. கென்னடியின் மனைவியான ஜாக்குலின்க்கும் இவர்க்குமான குழாயடிசண்டைதான் அன்றைய பத்திரிக்கைகளுக்கு அவல். இவரது இறப்பிற்கு முன்பு இவரது கடைசி பொது நிகழ்ச்சி கென்னடியின் பிறந்தநாள் விழா. அப்பொது அவர் பாடிய ‘Haappy Birthday Mr.President’ பாடலை கேட்டு ‘Jackie had fits’ என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் எழுதின.
தனது 36 வது வயதில் மிகவும் மர்மமான முறையில் இவர் இறந்தார். இவரது வீட்டின் பணிப்பெண்ணால் இவரது உடல் படுக்கை அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அளவுக்கு அதிகாமான தூக்கமாத்திரையால் இவர் இறந்தாக காரணங்கள் சொல்லப்பட்டாலும்,இவரது மரணம் இன்னும் மர்மம் நிறைந்தாகவே கருதப்படுகிறது.